டெல்லி, மும்பை, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு
டெல்லி:
அயோத்தியில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத்உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் முக்கிய கோவில்களும் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நகர போலீஸ் கமிஷ்னர் ராய் தெரிவித்துள்ளார். அதே போல பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கும் கமாண்டோ படைபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகரில் மதரீதியில் பிரச்சனை நிறைந்த பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஆந்திரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்-செகந்திராபாத் இரட்டை நகர்களில்மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதே போல போபால் உள்பட மத்தியப் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளிலும், கொல்கத்தா உள்பட மேற்கு வங்கத்தின் பலபகுதிகளிலும், பிகார் மாநிலம் முழுவதும், அஸ்ஸாம், திரிபுராவிலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரிலும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதே போல தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ்அலுவலகங்களுக்கும் கோவில்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications