கடலோர கிராமங்களில் சுனாமி தகவல் மையங்கள்: கலாம் யோசனை
கோயம்பத்தூர்:
சுனாமியை முன் கூட்டியே அறிய வகை செய்யும் தகவல் மையங்கள் கடலோர கிராமங்களில் அமைக்கப்பட வேண்டும் என்றுகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று எட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலாம், தனது பால்ய நண்பர் டி.சம்பத் ராஜையும் அவரது இல்லத்திற்குச்சென்று சந்திக்கிறார்.
முதலாவது நிகழ்ச்சியாக, சிறுதுளி என்ற அமைப்பின் சார்பில் 74 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலாமுடன்உரையாடினர். அப்போது குழந்தைகளிடையே கலாம் பேசுகையில், நாம் எல்லோரும் நல்ல குழந்தைகள். நமக்கு வைரம் போலசக்தி உள்ளது.
இதனால் நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். கடவுள்எப்போதும் நம்முடன் இருக்கும் போது வேறு யாராலும் நம்மை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.
வாசிப்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்ல புத்தகங்களை வாசிக்க, வாசிக்கத் தான் நமக்கு நல்ல எண்ணங்கள்வளரும். நல்ல எண்ணங்கள் வளர்ந்தால் தான் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும் என்றார்.
சிறு துளி அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 74 பள்ளிகளைச்சேர்ந்த 148 மாணவ, மாணவியர் கலாமுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அமிர்தானந்த மயி மடம் மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து புதிய அறிவியல் மையத்தை நிறுவியுள்ளன. இந்த மையத்தைஅப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.
சுனாமி தகவல் மையங்கள்:
பின்னர் அவர் பேசுகையில், கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். 21வதுநூற்றாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமின்றி, அறிவுத் திறனும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
சுனாமியை முன்கூட்டியே அறிய வகை செய்யும் தகவல் மையங்களை கடலோர கிராமப்புறங்களில் அமைக்க வேண்டியதுஅவசியம் என்றார் கலாம். நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்த மயி, இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பீளமேட்டில் சர்வதேச தொழில் கண்காட்சியை கலாம் தொடங்கி வைத்தார்.
மாலையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பாரதியார்பல்கலைக்கழக மாணவ, மாணவியருடன் உரையாடுகிறார்.
இதுதவிர மேலும் சில நிகழ்ச்சிகளிலும் கலாம் பங்கேற்கிறார். அதன் பின்னர் சம்பத் ராஜ் வீட்டுக்குச் சென்று உணவருந்தும்கலாம் இரவில் டெல்லி திரும்புகிறார்.
கலாம் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications