காங்கிரசில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக சதி: வாசன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சியில் அவரைப் புகழ்ந்து பேசியதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயக மூர்த்தி மீது நடவடிக்கைஎடுக்கப்படாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சோனியா காந்தி தான் தலைவர். அவரது முடிவுக்கும், கொள்கைக்கும் மாறாக யாருமேநடக்க மாட்டார்கள். இதை விநாயக மூர்த்தியும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாங்கள் அனைவருமே இதில் மிகத் தெளிவாக உள்ளோம். சோனியாவின் கட்டளையை மீற மாட்டேன் என்று விநாயகமூர்த்தியும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயலுகிறது. ஆனால் அது நடக்காது. சோனியாவின் பின்னால் காங்கிரஸ்கட்சி அணிவகுத்து நிற்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் முயல்வதாக கூறப்படுவதுபொய்யானது.
அப்படியே யாராவது நினைத்தாலும் அது கட்சியின் தலைமைக்கு எதிரானது. கட்சி மேலிடத்தின் ஒட்டுமொத்த உணர்வைபிரதிபலிப்பவர்கள் தான் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியும்.
திமுக தலைமையிலான கூட்டணியின் முயற்சியால் வரலாற்றுச் சிறப்பு மிக்க சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறப் போகிறது.முதல் கட்டமாக வெற்றிகரமாக தொடக்க விழா சிறப்பாக நடந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அதிமுக அரசு செய்யாத சாதனைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரே ஆண்டில்செய்துள்ளது என்றார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications