டி.ஆர்.பாலுவுக்கு எதிரான நோட்டீஸ் வாபஸ்: சென்னை மாநகராட்சி திடீர் பல்டி!
சென்னை:
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை காலி செய்யுமாறு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பிய நோட்டீஸை சென்னை மாநகராட்சி திடீர் என்று வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்க டி.ஆர்.பாலுவுக்கு சென்னைமாநகராட்சி இடம் ஒதுக்கியது. கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக டி.ஆர்.பாலு இருந்தபோது இந்த அலுவலகம்ஒதுக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2004ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து அலுவலகத்தை காலி செய்யுமாறு கூறி டி.ஆர்.பாலுவுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. கடந்தஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து பாலு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில், இப்படி நோட்டீஸ்அனுப்ப மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. விதிமுறைக்கு எதிரான இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே தென் சென்னை தொகுதி எம்.பி.யாக மீண்டும் பாலுவே வெற்றி பெற்றார். இந் நிலையில் பாலு தாக்கல் செய்தமனு, நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பாக்கியலட்சுமி, அலுவலகத்தை காலி செய்யும்படிடி.ஆர்.பாலுவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை மாநகராட்சி திரும்பப் பெறுகிறது. அலுவலகத்தை காலி செய்யுமாறுடி.ஆர்.பாலுவை மாநகராட்சி வற்புறுத்தாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து டி.ஆர்.பாலுவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications