அயோத்தி: உயரதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை
சென்னை:
அயோத்தி தாக்குதலை தொடர்ந்து, ஊட்டியில் 3 நாட்கள் ஓய்விற்கு சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று அவசரமாகசென்னை திரும்பி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் ஜெயலலிதா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்துஉடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தோழி சசிகலாவுடன் ஊட்டி சென்றார். அவர் ஊட்டியில் 3 நாட்கள் ஓய்வெடுப்பார் என்றுமுதலில் கூறப்பட்டது.
இந் நிலையில் நேற்று முன்தினம் (5ம் தேதி) அயோத்தியில் 6 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இவர்கள்அனைவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியாமுழுவதும் கோவில்கள் உட்பட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
தமிழ்நாட்டிலும் அனைத்து முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாஊட்டியிலிருந்து நேற்று 3.30 மணியளவில் சென்னை திரும்பினார். உடனடியாக கோட்டைக்கு வந்த அவர், தலைமைச் செயலர்நாராயணன், உள்துறைச் செயலர் பவன்ரெய்னா, டி.ஜி.பி. அலெக்சாண்டர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.
அயோத்தி தாக்குதலை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது, தீவிரவாதிகள் நடமாட்டத்தைக்கண்காணிப்பது போன்றவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications