கபினி நீர் வருவதில் தாமதம்
சேலம்:
காவிரிப் படுகை நீண்ட காலமாக வறண்டு போய்க் கிடப்பதால் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர்மேட்டூருக்கு வருவது மேலும் சில நாட்கள் தாமதமாகும் என்று தெரிகிறது.
கேரளாவின் வயநாடு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் கபினி அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி நீரே தேவை. இதனால் பாதுகாப்புகருதி அணை திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் மேட்டூர் நோக்கி வந்து கொண்டுள்ளது. இருப்பினும், காவிரிப் படுகை பல மாதங்களாக தண்ணீரையே காணாமல்,வறண்டு போய்க் கிடக்கிறது. இதனால் மேட்டூர் நோக்கி வரும் நீர் பாதியிலேயே உறிஞ்சப்பட்டு விடுகிறது.
இதன் காரணமாக தண்ணீரின் வேகம் குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்த்தபடி வெள்ளிக்கிழமை மேட்டூர் அணைக்கு கபினிநீர் வராது என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டு (இந்த இடத்தில் வரும் நீரை வைத்துத் தான் தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரைகர்நாடகம் கணக்கிடுகிறது) பகுதிக்கு தண்ணீர் வரவே இன்னும் நான்கு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதனால் கர்நாடகம் திறந்து விட்டுள்ள காவிரி நீர் எப்போது மேட்டூருக்கு வந்து சேரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications