இந்துக்களை புண்படுத்தும் கட்டுரை: கருணாநிதிக்கு சம்மன்
சென்னை:
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கட்டுரைகள் எழுதியதாக திமுக தலைவர் கருணாநிதி மீதுதொடரப்பட்டுள்ள வழக்கில் அவர் ஜூலை 25ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டைகுற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த கெளதமன் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.அதில்,இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக திமுக தலைவர் கருணாநிதி தனது முரசொலி நாளிதழில்தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குபுதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி வருகிற 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதி பால்ராஜ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications