முலாயம் சிங்குடன் சிவராஜ் பாட்டீல் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தி தாக்குதலை தொடர்ந்து நேற்று உத்திர பிரதேச மாநிலத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்,அம்மாநில முதலவர் முலாயம் சிங் யாதவுடன் ஆலோசனை நடத்தினார்.
அயோத்தியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் இந்தியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உத்திர பிரதேச மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் நேற்று அயோத்தி விரைந்தார். மாலையில் அவர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியை பார்வையிட்டார்.
பின் அவர், உத்திர பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனைநடத்தினார். சிவராஜ் பாட்டீலுடன் அரசியல் கட்சித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, சத்யபிரத் சதுர்வேதி, சல்மான் குர்ஷித்ஆகியோரும் சென்றனர்.












Click it and Unblock the Notifications