சீன அழகிப் போட்டிக்கு செல்லும் "மிஸ் சென்னை
சென்னை:
சீனாவில் நடைபெறவுள்ள இன்டர் கான்டினென்டல் - 2005 அழகிப் போட்டியில் "மிஸ் சென்னை தீபா ராஜன் கலந்துகொள்கிறார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த "மிஸ் சென்னைஅழகிப் போட்டியில் தீபா ராஜன் முதல் பரிசு பெற்றார். இவர், சீனாவில் வரும்30ம் தேதி நடைபெறவுள்ள இன்டர் கான்டினென்டல் அழகிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீனா ஹூயாங்கான் நகரில் நடைபெறவுள்ள இந்த 34வது அழகிப் போட்டியில் 69 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் "மிஸ் சென்னை அழகி தீபா ராஜன் பங்கேற்கிறார்.
சென்னையில் உள்ள கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவர், ஒரு பரத நாட்டியக் கலைஞர்.இவரது பெற்றோர்கள் துபாயில் வசிக்கின்றனர். தீபா தனது சகோதரனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
சென்னையில் இருந்து இன்று சீனாவுக்கு புறப்படும் தீபா ராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
சீனாவில் ஹூயாங்கான் நகரில் நடைபெறும் அழகிப் போட்டியில், அங்கு சென்றது முதல் தொடர்ந்து 20 நாட்கள் போட்டியில்கலந்து கொள்பவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
பேஷன் ஷோ, மலையேற்றம், தனி நபர் திறமை, ஒட்டுமொத்த தனித் திறமை, சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு என்றுபல்வேறு சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
இந்தியா சார்பில் பங்கேற்கும் போது இந்திய பாரம்பரிய உடை, நீச்சலுடை, மாலை நேர விருந்துக்கு அணியும் கவுன் என்று 3வகையான உடையலங்காரப் போட்டிகளிலும் பங்கேற்கிறேன். இறுதிப் போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. அழகும்,திறமையும் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். போட்டியில் வெற்றி பெற்று பட்டத்துடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications