கஞ்சா வழக்கு: மதுரை கோர்ட்டில் ஜனனி ஆஜர்
மதுரை:
கஞ்சா வழக்கில் இளம்பெண், ஜனனி மதுரை போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ஷெரீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரைகருப்பாயூரணி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். 30 கிலோ கஞ்சா, ரூ. 1 கோடி ரொக்கப் பணம் ஆகியவற்றைவைத்திருந்ததாக அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனனி உள்ளிட்டோர்தடை வாங்கினர். பின்னர் உச்சநீதிமன்றம் மூலம் 3 பேரும் ஜாமீனில் விடுதலையாகினர்.
இந் நிலையில் மதுரை போதைப்பொருள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனனிமட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஷெரீஜா மற்றும் சதீஷ் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்குவரவில்லை.
இதையடுத்து வழக்கை வருகிற 25ம் தேதிக்கு நீதிபதி மாணிக்கம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீதிமன்றம் வந்திருந்த ஜனனி, கொஞ்சம் சதை போட்டிருந்தார். படு உற்சாகமாக காணப்பட்டார்.அவரைக் காண ஏராளமான பேர் நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications