லண்டனில் இன்று மர்ம பார்சல் ஏற்படுத்திய பீதி
லண்டன்:
லண்டனில் முக்கிய தெரு ஒன்றில் மர்மப் பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பிரதமர் டோனி பிளேர்வசிக்கும் தெரு உட்பட பல முக்கிய தெருக்களும் மூடப்பட்டு விட்டன. இங்கு பொதுமக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு லண்டன் நகரமே தலை கீழாக மாறிவிட்டது. இந்நகர மக்கள் இன்னும்குண்டு வெடிப்பு பீதியிலிருந்து மீளவில்லை. மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.
மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் இன்னும் பொதுமக்களிடையே உள்ளது. போலீஸாரும் பீதியைகிளப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நேற்று இங்கிலாந்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பர்மிங்ஹாம் நகரின் முக்கியபகுதியிலிருந்து 30,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந் நிலையில் இன்று மத்திய லண்டனிலுள்ள பிரதமர் டோனி பிளேர் வசிக்கும் டெளனிங் தெரு, ஒயிட் ஹால் தெரு,பாராளுமன்றம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதிகள் இன்று திடீரென மூடப்பட்டன.
அப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அனைத்தையும் போலீஸார்அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒயிட் ஹால் பகுதியில் ஒரு மர்ம பார்சல் ஒன்று கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றார். வேறு எதையும் கூறஅவர் மறுத்து விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications