வழக்கறிஞர்கள் பிரச்சினை: கருணாநிதி தலையிட்டார்
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறக் கோரி தமிழகம்முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மத்திய உள்துறை சில திருத்தங்களை செய்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதுதொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்திய தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் தற்போது தங்களதுபோராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் காரணமாக உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்குகள்விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இந் நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில், வழக்கறிஞர்கள்திங்கள்கிழமை இரவு திடீரென கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.
கருணாநிதி அழைப்பின் பேரில் அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் பிரதமரை சந்திக்க ஏற்பாடுசெய்திருப்பதாகவும், பிரதமரை சந்தித்து பிரச்சினைகளை விளக்குமாறும், அதற்கு முன்பாக வேலை நிறுத்தத்தை வாபஸ்பெறுமாறும் கருணாநிதி கோரினார்.
ஆனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் முதலில் சந்தித்து விட்டு அதன் பின்னர் முடிவு எடுப்பதாக பிரபாகரன்,கருணாநிதியிடம் தெரிவித்தார். கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க கருணாநிதி ஏற்பாடு செய்துள்ளார். மத்திய தகவல் துறை அமைச்சர் தயாநிதிமாறனை செவ்வாய்க்கிழமை டெல்லியில் சந்திக்கிறோம். பிறகு அவருடன் சேர்ந்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைசந்தித்துப் பேசுகிறோம் என்றார்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், குற்றவியல்நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் தொடர்பாக தமிழக வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, தான் தயாராக இருப்பதாகபாட்டீல் தெரிவித்திருந்தார்.
மேலும், எந்த திருத்தம் வழக்கறிஞர்களுக்கு ஆட்சேபமாக இருக்கிறதோ அதை பரிசீலனை செய்யவும் தான் தயாராகஇருப்பதாக பாட்டீல் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications