குற்றவாளிகளை விடுவிக்க வாலிபரின் நூதன போராட்டம்
கும்பகோணம்:
சிறையில் 10 ஆண்டுகளைக் கடந்தும் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்கக் கோரி கும்பகோணத்தில்முன்னாள் குற்றவாளி ஒருவர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந் நிலையில், இன்று காலை கும்பகோணம் ராணி பூங்கா அருகே உள்ள அரச மரத்தில் விடுவிடுவென ஏறினார் செல்வம்.மரத்தின் உச்சிக்கு சென்று விட்ட அவர் அங்கிருந்து கீழே போய்க் கொண்டிருந்தவர்களை உரத்த குரல் எழுப்பி அழைத்தார்.
அனைவரும் மேலே பார்த்தபோது அபாயகரமான நிலையில் மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார் செல்வம். இதுகுறித்துதீயணைப்புப் படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து மேலே இருந்தநபரிடம் பேசினர்.
அப்போது செல்வம், 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளை உடனடியாகவிடுதலை செய்ய வேண்டும்.
காந்தி, அண்ணா பிறந்த நாட்களின் போது நன்னடத்தை கைதிகளை முன்பு விடுவிப்பார்கள். தற்போது அதுபோலசெய்வதில்லை. அதையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கைகள் குறித்து மேலிடத்தில் பேசி நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை அதிகாரிகள் செல்வத்திடம்உறுதியளித்தனர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வர சம்மதித்தார். பின்னர் தீயணைப்பு வண்டியின் ஏணி மூலம் செல்வத்தைகீழே இறக்கினர்.
பின்னர் அவரை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். செல்வத்தின் இந்த நூதனப்போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இதேபோல மரத்தில் ஏறி சில கோரிக்கைகளைமுன் வைத்து பரபரப்பூட்டியவர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications