பெங்களூர் நீதிமன்றத்தில் தினகரன் திடீர் சரண்: கைதாகாமல் தப்பினார்
பெங்களூர்:
பெங்களூர் தனி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து அதிமுக எம்பியும் சிசகலாவின் அக்காள்மகனுமாந டி.டி.வி. தினகரன் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு முன்பும் தினகரன் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜாராகமலேயே இருந்து வந்தார். தான் ஒருஎம்.பி என்றும் தனக்கு பல வேலைகள் இருப்பதாகவும் கூறிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வராமல் காலம் கடத்திவந்தார்.
இந் நிலையில் நேற்றும் சொந்த அலுவல் காரணமாக தினகரனால் ஆஜராக முடியவில்லை என அவரதுவழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி பச்சாப்பூரே, தினகரனை கைதுசெய்து வரும் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தினகரன் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின் அவரை ரூ. 1லட்சம் சொந்தஜாமீன் உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
தினகரனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதைதொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் ஏதாவது சாக்குபோக்கு கூறிக் கொண்டே நாட்களைக்கடத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த விசாரணையின் போது இவர்கள் பெங்களூர்நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
அதே போல சசிகலாவின் உறவினரான இளவரசியும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிடுவார் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்து ஆஜராகி வரும் ஒரே நபர் சிவாஜி வீட்டு மருமகனும் சசிகலாவின் அக்காள்மகனுமான சுதாகரன் மட்டுமே. கூலிங்கிளாஸ் மற்றும் தனது ஆதரவாளர்கள் புடைசூழ, பெங்களூருக்கு டூர்வருவது மாதிரியான கெட்-அப்பில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிடுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications