காவிரி: மணிசங்கர் அய்யரை முற்றுகையிட்டவர்கள் கைது
சீர்காழி:
காவிரியில் தண்ணீர் திறந்த விடக்கோரி சீர்காழி அருகே மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரை வழிமறித்து முற்றுகையிட்டஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிகழச்சிகள் முடிந்த பின்னர் மணிசங்கர அய்யர் மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தென்பாதி என்றஇடத்திற்கு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அமைச்சரின் காரை திடீரென்றுமறித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுமறியலில் ஈடுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 9 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதன் பிறகு மணிசங்கர அய்யர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications