மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வந்த மும்பை ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து 3 பேரிடம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
அதுபோல, நேற்று அதிகாலை சென்னை வந்த மும்பை மெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 3 பயனிகளிடம் பணம்கொள்ளை அடிக்கப்பட்டது.
மூன்று பேரும் ரயில் பெட்டியில் மயங்கி கிடந்தனர். அவர்களை சென்னை ரயில்வே போலீசார் கொண்டு வந்து அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். மயங்கிக் கிடந்த 3 பேரும் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மூன்று பேரும் மயங்கிய நிலையில் இருப்பதால் அவர்களிடமிருந்து எவ்வளவு பணம், பொருள்கள் கொள்ளை போனது என்பதுதெரியவில்லை.
இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications