சத்தியமூர்த்தி பவனில் விநாயகமூர்த்தி உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விநாயகமூர்த்திஎம்எல்ஏ, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போரட்டத்தை தொடங்கினார். இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் விநாயகமூர்த்தி சிறப்புஅழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் அவர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களைப் புகழ்ந்து பேசினார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த விநாயகமூர்த்தியை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு பேரை கட்சியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம்செய்து வாசன் உத்தரவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் விநாயகமூர்த்தியின் வீட்டில் அதிருப்தி கோஷ்டியினர் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் குறித்து விநாயகமூர்த்தி கூறுகையில், தாக்குதலைத் தூண்டி விட்டவர் ராயபுரம் மனோதான்.

ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், யாரோ சம்பந்தமில்லாத நான்கு பேர் மீது வாசன் நடவடிக்கைஎடுத்துள்ளார். மனோ, வாசனின் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் இனியும் பொறுமை காப்பதில் புண்ணியமில்லை. நாளை (சனிக்கிழமை) காலை சத்தியமூர்த்தி பவனில் நான்உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த விஷயத்தில் ஒரு முடிவு தெரியும் வரை நான் விடப் போவதில்லை என்றார்.

இதன்படி இன்று காலை 8 மணியளவில் விநாயகமூர்த்தி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்குள்ள தியாகிகள் அரங்கிற்குசென்ற அவர், காமராஜர் படம் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.அவரது ஆதரவாளர்கள் சிலரும் அவருடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். ஆனால் அதை அவர் ஏற்காமல் தனியாகபோராட்டத்தில் ஈடுபட்டார். நேரம் செல்லச் செல்ல விநாயகமூர்த்திக்கு ஆதரவாக ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள்சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் சத்யமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+