பி.இ. மாணவர் சேர்க்கை: 30ம் தேதி முதல் கவுன்சிலிங்
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வரும் 30ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இரண்டு இடங்களை சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பிடித்துள்ளனர்.
முதலிடத்தை அண்ணா நகரைச் சேர்ந்த சந்தோஷ் ஜூட் (298.21), இரண்டாவது இடத்தை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாஸ்பிரசாத் (297.88), மூன்றாவது இடத்தை கோவையைச் சேர்ந்த சிவேஷ் செல்வகுமார் (297.19) ஆகியோர் பெற்றுள்ளனர்.
2வது இடம் பிடித்துள்ள சீனிவாஸ் பிரசாத், நுழைவுத் தேர்விலும் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றைச் சாளர (சிங்கிள் வின்டோ) அடிப்படையில் சீட்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. மொத்தம் 227 கல்லூரிகளில் 37,675இடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. முக்கிய கவுன்சிலிங் 30ம் தேதி தொடங்குகிறது.
விளையாட்டு வீரர்கள் பிரிவினருக்கான கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்கி 22ம தேதி வரை நடைபெறுகிறது. உடல்ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் 27ம் தேதி காலையும், வெளி மாநில மாணவர்களுக்கு அன்று பிற்பகலிலும் கவுன்சிலிங்நடைபெறும்.
பி.ஆர்க்கிடெக்ட் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கவுன்சிலிங் நடைபெறுகிறது.
சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), மதுரை (தியாகராஜா பொறியியல் கல்லூரி), கோவை (அரசு தொழில்நுட்பக் கல்லூரி),திருச்சி (தேசிய தொழில்நுட்ப கல்லூரி) ஆகிய ஊர்களில் கவுன்சிலிங் ஒரே நாளில் தொடங்கி நடக்கவுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications