திருச்சி விமான விபத்து வெறும் வதந்தி!
திருச்சி:
திருச்சி அருகே பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்ட தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விமானம் விபத்தில் சிக்கி கீழே விழுந்து விட்டதாக செய்திகள் பரவின. இந்த விமானத்தில் 2 பேர் இருந்ததாகவும்,அவர்கள் என்ன ஆனார்கள் என்பதிலும் குழப்பம் நிலவியது.
விமானம் விழுந்து விட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி புறநகர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீஸ் படையினரும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஜீயபுரம்என்ற பகுதிக்கு விரைந்தன.
ஆனால், அங்கு விமானம் விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஜீயபுரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள வயல்கள்உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் விமானத்தைத் தேடினர். ஆனால் எங்குமே விமானம் இல்லை.
இதனால் குழப்பமடைந்த போலீஸார் திருச்சி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர்.
அதற்கு விமான நிலைய அதிகாரிகள், திருச்சி விமான நிலையத்திலிருந்து எந்த பயிற்சி விமானமும் செல்லவில்லை. ஆனால்கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மிக்-32 ரக பயிற்சி விமானம் ஒன்று அந்த நேரத்தில் பயிற்சி மேற்கொண்டதுஎன்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சூலூர் விமானப்படை தளத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மிக்-32 ரக விமானம் பயிற்சிமுடித்து விட்டு காலை 10.17 மணிக்கெல்லாம் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்தே போலீசார் நிம்மதியடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications