சாதாரண உப்புக்கு தடை கூடாது: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
சாதாரண உப்புக்கு தடை விதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது ஒரு குடிசைத் தொழில் போல நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சாதாரண உப்பின் மொத்த தயாரிப்பில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களிடமிருந்து தான் மொத்த வியாபாரிகளுக்கு வருகிறது. இவர்கள் வியாபார உத்தியைக் கொண்டு விற்பனைசெய்கின்றனர்.
அயோடின் கலந்த உப்பை மக்கள் மத்தியில் பரவலாக்கும் நோக்கத்தில், அயோடின் கலக்கப்படாத சாதாரண உப்பை மத்தியஅரசு தடை செய்ய தீர்மானித்திருப்பதை அறிந்து சிறு வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது என்பதால் அயோடின் கலந்த உப்பின் தேவையை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.சாதாரண உப்பைத் தவிர்த்து விட்டு அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது படிப்படியாகவும், இயற்கையாகவும் நிகழ்ந்திடவேண்டும்.
அயோடின் உப்பை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பிரசாரத்தையும், விளம்பரத்தையும் அரசு மேற்கொள்ளலாம்.
சாதாரண உப்பு உற்பத்தியை திடீரென தடை செய்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.எனவே சாதாரண உப்பின் மீது விதிக்க உத்தேசித்துள்ள தடையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுகருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications