கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கோபிகா: அலையால் உயிர் தப்பினார்
கேரள மாநிலம் ஆலப்புழை கடலோரப் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகை கோபிகாவையும், மலையாள நடிகர்திலீப்பையும் மிகப் பெரிய கடல் அலை இழுத்துச் சென்றது.
அதிர்ஷ்டவசமாக இன்னொரு அலை வந்து அவர்களை கரையில் தூக்கி வீசியதால் இருவரும் உயிர் தப்பினர்.
கோபிகா, சாந்துபொட்டு என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் கோபிகாவுக்கு ஜோடியாக திலீப் நிடிக்கிறார்.லால் ஜோஸ் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.
இப் படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்தது. கடற்கரையில் திலீப்பும், கோபிகாவும் படுத்து உருளுவது போல காட்சிவைக்கப்பட்டிருந்தது. தனக்கு நீச்சல் தெரியாது, எனவே இந்தக் காட்சியை மாற்றி அமைக்க முடியுமா என்று கோபிகாகேட்டுள்ளார்.
ஆனால் பரவாயில்லை, ஒன்றும் ஆகாது என்று அவரைத் தைரியப்படுத்தி கடலுக்குள் இறக்கி விட்டார் இயக்குனர் லால்ஜோஸ்.
அப்போது எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய அலை வந்து கோபிகாவையும், திலீப்பையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதை எதிர்பாராத படக்குழுவினர் பீதியில் உறைந்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே இன்னொரு அலை வந்துஇருவரையும் கரையில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது.
கடல் நீரை குடித்து விட்டதால் இருவரும் மயக்கமடைந்திருந்தனர். இதையடுத்து உடனடியாக இருவரையும்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் .சிகிச்சை அளிக்கபட்ட பிறகு இருவரும் கண் விழித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோபிகா கூறுகையில், மறு பிறவி எடுத்துள்ளேன். இந்தக் காட்சியில் நடிக்க நான் பயந்தேன். நான்பயந்தது போலவே ஆகி விட்டது. நல்ல வேளையாக கடவுள் காப்பாற்றி விட்டார் என்று பயம் நீங்காத முகத்துடன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications