நீதிபதி பதவி காலியிடம் விரைவில் நிரப்பப்படும்: மத்திய அமைச்சர்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றுமத்திய சட்டத்துறை இணை அமைச்சர் கே.வி.வெங்கடபதி கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் என்னால் ஆன அனைத்தையும் செய்து விட்டேன். இனிமேல் சம்பந்தப்பட்டவர்கள் தான் (மத்திய அரசு)இதுதொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் விரக்தியாக கூறினார்.
இந் நிலையில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வெங்கடபதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காலியாக உள்ள நீதிபதிபணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன.
இதுதொடர்பான அனைத்து பூர்வாங்க வேலைகளும் முடிந்து விட்டன. புதிய நீதிபதிகள் குறித்த பரிசீலனைஉச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 42 நீதிபதி பதவிகள் உள்ளன. ஆனால் தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பொறுப்பில் உள்ளனர்.இவர்களில் 8 பேர் இந்த மாதத்தில் ஓய்வு பெறவுள்ளனர். இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறைந்து விடும்.
முந்தைய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தனது பதவிக்காலத்தில் இரண்டு முறை புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பானபட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் அவை பரிசீலிக்கப்படவில்லை.
தற்போதைய தலைமை நீதிபதி கட்ஜுவும் ஒரு பட்டியலை அனுப்பினார். அதற்கும் இன்னும் ஒரு முடிவு வரவில்லை.
நீதிபதிகள் நியமனத்தில் ஜாதி அடிப்படையில் நியமனம் நடைபெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளதமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி ஒன்று காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
தங்களது ஜாதி தமிழகத்தில் பெரும்பான்மையான ஜாதிகளில் ஒன்றாக இருந்தும் ஒரு நீதிபதி கூட தங்களது ஜாதியைச்சேர்ந்தவராக இல்லை.
எனவே புதிய நீதிபதிகளில் சிலர் எங்களது ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அந்தமுக்கியக் கட்சி நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய நீதிபதிகளை அறிவிப்பதில் மத்திய அரசுகாலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications