திருவாவடுதுறை இளைய மடாதிபதி மீண்டும் சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் இளைய மடாதிபதி காசிவிசுவநாத பண்டார சுவாமிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மயிலாடுதுறை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் 11 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைமற்றும் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, தண்டனை பெற்றவர்கள் நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதைதொடர்ந்து இவர்களைக் கைது செய்ய நாகை செஷன்ஸ் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
இந் நிலையில் முன்னாள் இளைய மடாதிபதி உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் நான்கு பேரும்கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications