கர்நாடக அணைகளில் மத்திய குழு ஆய்வு: நாளை மேட்டூர் வருகை
மைசூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹோரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை 3அதிகாரிகள் கொண்ட மத்திய குழு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
அதன்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சக திட்ட அதிகாரி பரத்வாஜ், நீர் ஆணைய உறுப்பினர் அகுஜா, வேளாண்துறைஇணை செயலாளர் சம்ஷேர் சிங் ஆகியோர் உட்பட 6 பேர் கொண்ட குழு இன்று கர்நாடகம் வந்தது.
இன்று காலை பெங்களூர் வந்த அவர்கள் கர்நாடக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். பின்னர் கபினி, கிருஷ்ணராஜ சாகர்,ஹோரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளைப் பார்வையிட்டு நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்துஇக்குழுவினர் சனிக்கிழமை மேட்டூர் செல்கிறார்கள்.
இங்கு ஆய்வு செய்த பிறகு திங்கட்கிழமை பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.
இதற்கிடையே, கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், அந்த அணையிலிருந்து விநாடிக்கு560 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.
அணைக்கு நீர் வரத்து அபரிமிதமாக உள்ளது. எனவே நீர் திறப்பு இன்னும் சில நாட்களில் கூடுதலாக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications