விநாயகமூர்த்திக்கு கை எலும்பு முறிவு!
சென்னை:
காங்கிரஸ் மேலிடத்திலிருந்து, உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் வந்துள்ள நிலையில்,சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி, கை எலும்பு முறிவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில்மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசப் போக சர்ச்சையில் சிக்கியுள்ளார் விநாயகமூர்த்தி. வாசன் ஆதரவாளர்களுக்கும்,அவருக்கும் கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. சத்தியமூர்த்தி பவனில் வைத்து தாக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது வீட்டிலும் தாக்குதல் நடந்தது. வாசன் எதிர்ப்புத் தலைவர்களை திரட்டி சென்னையில் கூட்டம் நடத்தவும்விநாயகமூர்த்தி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந் நிலையில் விநாயகமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்து நாட்களில் பதில்தருமாறும் விநாயகமூர்த்தி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று காலை விநாயகமூர்த்தி சென்னை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள்செய்துள்ளார். கை எலும்பு முறிவு காரணமாக அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்குஎக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
தேவைப்பட்டால் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று கூறப்படுகிறது.
விநாயகமூர்த்தி மருத்துவப் பரிசோதனை செய்து கொண்ட இதே அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டபோது தான் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார் விநாயகமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications