500 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் தமிழகம் முழுவதும் செல்லலாம்!
சென்னை:
ரூ. 500க்கு டிக்கெட் எடுத்தால், தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரு வாரத்திற்கு பயணம் செய்யும் திட்டத்தை தமிழகஅரசு அறிவித்துள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு விரைவுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், நபர் ஒருவருக்கு ரூ. 500 செலுத்தி வருடாந்திர பயணச்சலுகை அட்டையினைப் பெற்றுக் கொள்ளலாம்.இதன் மூலம், வருடம் முழுவதும் இப்போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் முன்பதிவு செய்யும்போதுபயணக் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு வார காலத்திற்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிப்பதற்காக,நபர் ஒருவருக்கு ரூ. 500 செலுத்தி பயண அட்டையினைப் பெற்று,
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் இந்த அட்டையைக் காட்டி ஒரு வாரத்திற்குள்தமிழகத்திற்குள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம்.
குறிப்பிட்ட ஊர்களுக்கு அடிக்கடி அரசு விரைவுப் போக்குவரத்து மூலம் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வண்ணம், 60நாட்களுக்குள் ஒரு குறிப்பிட்ட ஊருக்கு 5 முறை செல்லும் பயணிகளுக்கு 6வது பயணத்தை இலவசமாக மேற்கொள்ளசலுகை வழங்கப்படுகிறது.
இந்த 6வது முறை பயணம் 60 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதல் கட்டமாக இந்த 6வது இலவசபயணம், சென்னையிலிருந்து திருச்சி, சேலம், நாகை, தஞ்சாவூர், வேளாங்கண்ணி, கும்பகோணம்,பெங்களூர் ஆகியஇடங்களுக்கு மட்டும் அறிகப்படுத்தப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பஸ் நியைத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு அலுவலகத்தில் இந்த 3சலுகைத் திட்டங்களும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications