சொத்துக் குவிப்பு: பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, தினகரன், எம்.பி., இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, தினகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதைஎதிர்த்து ஆட்சேப மனு தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்திருந்தார்.
இதன்படி நேற்று ஆச்சார்யாவின் ஜூனியர் வழக்கறிஞர் சந்தோஷ் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, இளவரசி, தினகரன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் இந் நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோருவது ஏற்புடையதல்ல.
மேலும் இந்த வழக்கில் ஜெயலலிதா பெயரை சேர்க்க ஊழல் தடுப்புச் சட்டம் 19வது பிரிவின்படி அனுமதி பெறவேண்டும் என்றுஎதிர்த் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்படும்போது அவர் மக்கள் பிரதிநிதியாகஇருக்கவில்லை.
எனவே அந்த அனுமதியை பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் ஆஜரானார்கள். பாராளுமன்றக்கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தினகரன் ஆஜராகவில்லை என்றுகூறப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications