காவிரி: மத்திய குழுவின் பரிந்துரை இல்லாத அறிக்கை தாக்கல்!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவுப்படி கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகளைப் பார்வையிட்ட மத்திய குழுஎந்தவித பரிந்துரையும் இல்லாமல் ஒரு அறிக்கையை காவிரி கண்காணிப்புக் குழுவிடம் அளித்துள்ளது.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க உத்தரவிடவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய நிபுணர் குழுவை கர்நாடகத்திற்குஅனுப்பி நீர் இருப்பை ஆய்வு செய்வதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.அதன்படி 3 பேர் கொண்ட குழு கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளையும், தமிழகத்தில் மேட்டூர்அணையையும் பார்வையிட்டது. பின்னர் டெல்லி சென்ற இக்குழுவினர் காவிரி கண்காணிப்பு குழுவிடம் ஒரு அறிக்கையைதாக்கல் செய்துள்ளனர்.
அதில் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது போன்ற ஒரு பரிந்துரையும் இல்லை. இரு மாநிலஅணைகளின் நீர் இருப்பு, பயிர் நிலவரம் போன்றவை மட்டுமே அந்த அறிக்கையில் உள்ளதாம்.
மேலும், கர்நாடகத்திலிருந்து அதிக அளவு நீர் மேட்டூர் அணைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், போதிய நீர் இருப்பு இருமாநில அணைகளிலும் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரின் பங்கு குறித்து ஒரு வார்த்தைகூட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications