இரான் அதிபராக மெஹ்மூத் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:
இரானின் புதிய அதிபராக மெஹ்மூத் அகமதிநிஜாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஜூன் மாதத்தில் நடந்த தேர்தலில் வென்ற மெஹ்மூதுக்கு இரானின் சக்தி வாய்ந்த மூத்த மத குரு அலி கொமேனி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.1981ல் நடந்த இரானிய புரட்சிக்குப் பின் பதவியேற்கும் 6வது ஜனாதிபதி இவர். தீவிர மத நம்பிக்கை கொண்டவர் என்றாலும்இவர் மதத் தலைவர் அல்ல. மதத் தலைவர் அல்லாத ஒருவர் இரானிய ஜனாதிபதியாவது கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
இரானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் கடும் நெருக்குதல் தந்துகொண்டிருக்கும் நிலையில் மெஹ்மூத் இந்தப் பதவியை ஏற்றுள்ளார்.
தனது அணு ஆராய்ச்சி மையங்களை ஐ.நாவின் அணு சக்திப் பிரிவின் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடுவதில் இரான்தொடர்ந்து தாமத்தித்து வருகிறது. இதையடுத்து இரானுக்கு அமெரிக்கா, பிரிட்டனுடன் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும்கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந் நிலையில் அதிபராகியுள்ளார் மெஹ்மூத்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications