தலைமை நீதிபதி மீது புகார்: சென்னை வக்கீல் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் மீது ஆதாரம் இல்லாமல் புகார் கூறிய வழக்கில் சென்னைஉயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கருப்பன் இன்று டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.எஸ்.ஆனந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். அப்போது, வயதுச் சான்றிதழில்முறைகேடு செய்து ஆனந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகி விட்டார் என கருப்பன் புகார் கூறினார்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கருப்பனின் புகாரில்ஆதாரம் இல்லை என்று கூறி இதுதொடர்பாக மேல் விசாரணை நடத்தி கருப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லிகுற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கில் கருப்பன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் கருப்பனைக் கைதுசெய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றார்.

தொடர்ந்து வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து கருப்பனைக் கைது செய்ய புதியபிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. டெல்லி போலீஸார் சென்னைக்கு விரைந்து வந்து பிடிவாரண்ட் பேரில் கருப்பனை இன்றுகைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+