பாராளுமன்ற தாக்குதல்: கிலானி விடுவிப்பு, ஒருவருக்கு மரண தண்டனை
டெல்லி:
பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முகமது அப்சலுக்கு மரண தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்தவழக்கில் தொடர்புடைய பேராசிரியர் கிலானி விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று பாராளுமன்றத்தின் மீது 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். உடனடியாகபாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.இந்த சம்பவத்தில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், இந்ததாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷே முகமது என்ற தீவிரவாத இயக்கம் தான் காரணம் என்று கண்டுபிடித்தது.
இது தொடர்பாக டெல்லி கல்லூரி பேராசிரியர் கிலானி ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது அப்சல், செளகத்உசேன் மற்றும் செளகத் உசேனின் மனைவி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பேராசிரியர் கிலானியைவிடுதலை செய்தது.
இதை எதிர்த்து டெல்லி போலீஸார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்தது.
தாக்குதல் சம்பவத்தில் பேராசிரியர் கிலானியை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், முகமது அப்சலுக்கு மரண தண்டனையும்,செளகத் உசேனுக்கு 10 வருட சிறைத்தண்டனையும் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டசெளகத் உசேனின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications