செக்ஸ் தொழிலாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி!
சென்னை:
சென்னை நகரில் முதன் முறையாக செக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நடைபெறவுள்ளது.
பல்வேறு காரணங்களினால் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தவும், சமூகத்தின் பரிவுப்பார்வை அவர்கள் மீது விழச் செய்யவும், சுகாதார முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வித்தியாசமானஒரு நிகழ்ச்சியை நடத்த தொண்டு நிறுவனமான இந்திய சமுதாய நல அமைப்பு முடிவு செய்தது.இதன் விளைவாக விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் கொண்டு ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவுசெய்யப்பட்டது. முதல் முறையாக வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த விபச்சாரப் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் 28 பெண்கள் போட்டியில் கலந்துகொள்ள முன்வந்துள்ளனர். இவர்களில் ஒருவரான ரேகா கூறுகையில், எனக்குக் கல்யாணமாகி விட்டது. கணவர் பெரும்குடிகாரராக இருந்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டேன்.
எனக்குக் குழந்தைகள் உள்ளதால் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன்.விருப்பப்பட்டு இதைச் செய்யவில்லை. நான் இந்தத் தொழிலில் இருப்பது எனது குழந்தைகளுக்குத் தெரியாது, அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்கும் தெரியாது.
இதை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை.எனது குழந்தைகளுக்காத் தான் வாழ்ந்து வருகிறேன். இந்தப் போட்டி எனக்கு சற்றுமன ஆறுதலை அளிக்கும் என்றார்.
ராகினி என்ற பெண் கூறுகையில், வாடிக்கையாளர்களால் நான் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளேன். வேதனைகளைமறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்த ஒரு நாளாவது நான் எந்தவிதசித்திரவதையும், கொடுமையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும் என்றார்.
இந்தப் போட்டி குறித்து அமைப்பாளர் ஹரிஹரன் கூறுகையில், செக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தப் பெண்களின் குறைகளைஅறிந்து கொள்ளவும், எய்ட்ஸ் நோய் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவர்களிடையே பரப்புவதுமேஎங்களது முக்கிய நோக்கம்.
அதற்கு கிரிக்கெட் போட்டியை ஒரு ஊடகமாக நாங்கள் பயன்படுத்துகிறோம். செக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள பல பெண்கள்தங்களது பிரச்சினைகளை யாரிடமும் கூறுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் தனிமையிலேயே வாழ்கிறார்கள்.
உடல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் அவர்களிடையே இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களது மனஇறுக்கத்தைக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம். இதன் மூலம் சிலர் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினாலும் அதுஎங்களுக்கு சந்தோஷம் தான் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications