சங்கரராமன்: போலி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த 4 போலி குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக, சென்னை ஜார்ஜ் டவுன்நீதிமன்றத்தில் ஆறுமுகம், சதீஷ் உள்ளிட்ட நான்கு பேர் சரணடைந்தனர். தாங்கள் தான் சங்கரராமனைக் கொன்றதாக அவர்கள்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அவர்களை காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்த போது, உண்மையான குற்றவாளிகள்அவர்கள் அல்ல என தெரியவந்தது. இதையடுத்தே ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சிக்கி கைதாகினர்.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதான பலர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனர். அதில் போலி குற்றவாளிகள்நான்கு பேரும் அடங்குவர். இந் நிலையில் தங்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து போலி குற்றவாளிகள்நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.அதில், மனுதாரர்கள் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக அரசுத் தரப்பு கூறுகிறது.

ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. எனவே நான்கு பேரையும் விடுவிப்பதாகதீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+