புதுவை காங். தலைவர் மாற்றம்; ஜி.கே.வாசன் நீடிக்கிறார்
டெல்லி:
பாண்டிச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நாராயணசாமி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக முன்னாள்முதல்வர் பி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சியில் சமீப காலமாக கோஷ்டிப் பூசல் முற்றியது. முதல்வர் ரங்கசாமிக்கும், முன்னாள் அமைச்சர்கண்ணனுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக கண்ணன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இந்தப் பிரச்சினை முடிந்த சில மாதங்களில் ரங்கசாமிக்கும், தற்போதைய காங்கிரஸ் தலைவர் நாராயணசாமிக்கும் இடையேமோதல் வெடித்தது. இரு தரப்பினரும் மாறி மாறி புகார்களை கூறி வந்தனர்.
ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் நாராயணசாமி குறித்து சரமாரியாகப் புகார்களைக்கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது ரங்கசாமிக்கு உறுதி கூறப்பட்டது.
இந் நிலையில் திடீர் என நாராயணசாமி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக முன்னாள் முதல்வர் பி.சண்முகம்நியமிக்கப்பட்டுள்ளார். நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பு பி.சண்முகம் தான் கட்சித் தலைவராகஇருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகத்தையும் கோஷ்டிப் பூசல் தான் முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது. அவருக்குப் பதில் தான் ரங்கசாமி முதல்வர்பொறுப்பை ஏற்றார். எனவே, ரங்கசாமிக்கும், பி.சண்முகத்திற்கும் எத்தனை நாள் ஒத்துப் போகும் என்ற கேள்வி காங்கிரஸ்வட்டாரத்திலும், புதுவை மக்கள் மத்தியிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசன் தொடர்ந்து நீடிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications