தாவூத் மகள் திருமண வரவேற்பு: முஷாரப், பிரதமர் அஸீஸ், முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு
கராச்சி:
தாவூத் இப்ராகிமின் மகள் மற்றும் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட் மகனின் திருமண வரவேற்பில் பாகிஸ்தான் அதிபர்முஷாரப் உட்பட முக்கிய தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை.
இம்ரான் கான் உட்பட ஜாவித்தின் மிக நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் பிரபல சர்வதேச தாதா தாவூத் இப்ராகிமின் மகளுக்கும்,பிரபல பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட் மகனுக்கும் கடந்த மாதம் 23ம் தேதி அன்று துபாயில் மிகபலத்த பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு தாவூத் வருவார் என எண்ணி இந்திய புலனாய்வு அமைப்பினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்வரவில்லை. மேலும் முக்கிய பிரமுகர்கள் யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.
தனது மகனின் திருமணத்தில் முக்கியஸ்தர்கள் அதிகமாக கலந்து கொள்ளாததற்கு இந்திய மீடியாக்கள் தான் காரணம். அவர்கள்தான் தேவையில்லாமல் எனது மகனின் திருமணத்தை பரபரப்பு செய்தியாக்கி விட்டார்கள் என்று ஜாவித் மியாண்டட் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) கராச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளுமாறுபாகிஸ்தான் அதிபர் முஷாரப், பிரதமர் செளகத் அஸீஸ் மற்றும் தனது நெருங்கிய நண்பரும் முன்னாள் பாக். கிரிக்கெட் அணியின்கேப்டனுமான இம்ரான் கான் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்திய முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலருக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப், பிரதமர் செளகத் அஸீஸ், இம்ரான் கான் உட்படபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எவரும் கூட கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்களும்இதில் கலந்து கொள்ளவில்லை.
சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாஹிர்அப்பாஸ், மொய்ன் கான், வாஸிம் பாரி, ரஷீத் கான் ஆகிய ஜாவித்தின் கிரிக்கெட் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தனது மகள் திருமணத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்த தாவூத் இப்ராகிம், நேற்றைய வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications