ஆர்எஸ்எஸ் குரு தட்சணை: வாஜ்பாய், அத்வானி பங்கேற்பு
டெல்லி:
டெல்லியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் குரு தட்சணை நிகழ்ச்சியில் மாஜி பிரதமர் வாஜ்பாய், மாஜி துணைப் பிரதமரும் பாஜகதலைவருமான அத்வானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் பின்னணி கொண்டவர்கள் தங்களது கொள்கைகளை மீண்டும் பறைசாற்றி, உறுதி எடுக்கும்நிகழ்ச்சி தான் இந்த குரு தட்சணை நிகழ்ச்சி. ஆண்டுதோறும் நடக்கும் இந் நிகழ்ச்சியில் விஎச்பி, ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங் தள்உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உறுதி மொழி ஏற்பர்.இந்த நிகழ்ச்சி இம் முறை பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ராவின் இல்லத்தில் நடக்கிறது. எம்.பிக்கள் மற்றும்தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பாஜகஎம்.பிக்கள் அனைவரும் பங்கேற்கின்னர்.
இதில் துவாஜ பிரனாம் எனப்படும் காவிக் கொடிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெளியில்குறிப்பிடாமல் பெரிய அளவிலான பணத்தை குரு தட்சணையாக ஒவ்வொருவரும் வழங்குவர்.
பின்னர் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினரான ஸ்ரீபாத் சாஸ்திரி உரையாற்றுவார்.
ஜின்னாவைப் புகழ்ந்து பேசியதாக அத்வானியை பதவி விலகச் சொல்லி ஆர்எஸ்எஸ் குரல் எழுப்பி பிரச்சனை செய்த பின்நடக்கும் முதல் குரு தட்சணை நிகழ்ச்சி இதுவாகும்.


Click it and Unblock the Notifications
