அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை: திமுக கோரிக்கை
சென்னை:
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுக அமைச்சர்கள் மீது தேர்தல் ஆணையம்சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர்களாக இருக்கும்பல்வேறு அமைச்சர்கள் 13 லட்சம் போலி வாக்காளர் விண்ணப்பங்களை ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்திடம்கொடுத்தனர்.
இவை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்துஅவற்றில் 90 சதவீதம் போலியானவை என்று கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து போலி விண்ணப்பங்களைக்கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஆனால் இதுவரை அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்குத் தடைகோரிய மாநில அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம்எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தேர்தல் பணிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications