பத்திரமாய் தரையிறங்கியது டிஸ்கவரி
ஹூஸ்டன்:
டிஸ்கவரி விண்கலம் 7 விண்வெளி வீரர்களுடன் இன்று பத்திரமாகத் தரையிறங்கியது.
பெரும் பரபரப்புக்கிடையே இந்திய நேரப்படி இன்று மாலை கலிபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில்தரையிறங்கியது.
கடந்த மாதம் 26ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட டிஸ்கவரி ஓடம், 13 நாட்கள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு நேற்றுபிற்பகலில் தரையிறங்க இருந்தது.
புளோரிடாவில் உள்ள கேப் கனவெரால் கென்னடி விண்வெளி மையத்தில் டிஸ்கவரியை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் விண்வெளி மையம் அமைந்திருந்த பகுதியில் அடர்த்தியான மேகமூட்டம் காணப்பட்டதால் திட்டம் கைவிடப்பட்டுஇன்று தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இன்றும் வானிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இரு முறை தரையிறங்குவது தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கலிபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அதை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.மாலை 5.30 மணியளவில் டிஸ்கவரி வெற்றிகரமாக அங்கு தரையிறங்கியது.
![]() |
| (படம் நன்றி- பிபிசி) |
டிஸ்கவரி தரையிறங்கியது எப்படி?
ஷட்டில் எனப்படும் விண்வெளிக் கலங்கள் பூமிக்குத் திரும்பும்போது பல்வேறு சவால்களை சந்திக்கின்றன.
பூமியின் வாயு மண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வினால் விண்கலத்தைச் சுற்றி வெப்ப வாயுக்கள் (பிளாஸ்மா)உருவாகும். ஒரு தீப் பந்தமாகவே டிஸ்கவரி பூமிக்குள் நுழையும். இந்த வெப்பத்தை அதன் வெப்பம் தாங்கும் தகடுகள் தாங்கிக்கொள்ளும்.
தரையிறங்கும்போது...
1. முதலில் பூமிக்குள் நுழையும் முன் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்காக டிஸ்கவரி தலைகீழாகப் பறக்கும்.
2. வேகத்தைக் குறைப்பதற்காக அதன் பின் பகுதி முன் பக்கமாக கொண்டு வரப்படும். அதில் உள்ள ராக்கெட்டுகள் 3 நிமிடங்கள்எரிந்து டிஸ்கவரியின் வேகத்தை கணிசமாகக் குறைக்கும்.
3. இதன் பின்னர் 40 டிகிரி சாய்ந்தபடி பூமிக்குள் தலைகீழாக கீழிறங்கும் டிஸ்கவரி.
4. அப்போது டிஸ்கவரி விண்கலம் வாயு மண்டலத்துடன் உராயும். இதனால் பிளாஸ்மா எனப்படும் பல வண்ணம் கொண்டகொதிக்கும் வாயு உருவாகும். விண்கலம் முழுவதுமே கொதிக்கும் நிலையில் (சுமார் 3,000 டிகிரி பாரன்ஹீட்), சுற்றிலும் எரிந்துகொண்டே விண்கலம் பூமிக்குள் நுழையும்.
அப்போது உருவாகும் மின்காந்த அலைகளால் டிஸ்கவரிக்கும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையிலான ரேடியோதொடர்பு அறுபட்டுவிடும். டிஸ்கவரியை அதன் கம்ப்யூட்டர்களே கட்டுப்படுத்தி, வழி நடத்தும்.
5. வாயு மண்டலத்தின் உராய்வு குறைந்து, டிஸ்கவரியின் வேகமும் குறைந்தவுடன் அது ஒரு சாதாரண விமானத்தைப் போலபறக்க ஆரம்பிக்கும். வேகத்தை மேலும் குறைப்பதற்காக டிஸ்கவரி வளைந்து, வளைந்து பறக்கும்.
6. பூமியின் இருந்து 360 கி.மீ உயரத்தை அடையும்போது அதன் வேகம் 30,000 கி.மீட்டராக இருக்கும். இதையடுத்து 19 டிகிரிசெங்குத்தாக தரையை நோக்கி டிஸ்கவரி பாய்ந்து வந்து தரையிறங்கும்.
வெப்பத்தை தாங்கும் தகட்டில் ஏற்பட்ட சேதம் உள்பட பல தொழில்நுட்ப சிக்கல்களுடன் 7 விண்வெளி வீரர்களுடன் டிஸ்கவரிதரையிறங்கியதால் இந்த நிகழ்ச்சி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓடம் பத்திரமாக தரையிறங்கியதையடுத்து நாஸா நிம்மதியில் ஆழ்ந்துள்ளது. கடந்த முறை தரையிறங்கும்போது தான் ஷட்டில்கொலம்பியா வெடித்துச் சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications