ஆஜ்மீர் தர்ஹா: பிரதமர் சார்பில் புனிதத் துணி
Subscribe to Oneindia Tamil
ஆஜ்மீர்:
ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமியத் துறவி காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்ஹாவில் உள்ள அவரது சமாதியில் பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் சார்பில் ஜத்தர் எனப்படும் புனிதத் துணிகள்போர்த்தப்பட்டன.
சூபி பிரிவின் உலகப் புகழ் பெற்ற துறவி காஜா மொய்னுதீன். இங்கு வருடந்தோறும் நடக்கும் உருஸ் விழா இப்போதுநடைபெற்று வருகிறது.பிரதமர் மற்றும் சோனியாவின் சாரபில் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சரான பிரிவிதிராஜ் செளகான் இன்று இருபுனிதத் துணிகளை போர்த்தினார்.
அவருடன் முன்னாள் ரயில்வே அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷெரீப், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கல்லா ஆகியோரும் சென்றனர்.
கடந்த வாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி ஆகியோரின் சார்பில் புனிதத் துணிகள்போர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications