ஆகஸ்ட் 15: கரூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கரூர்:
சுதந்திர தினத்தன்று கரூர் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என வந்த கடிதத்தால, ரயில் நிலையத்தில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால் தமிழகம்முழுவதும் ரயில் நிலையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தர்மபுரி அருகே போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக சிம்னி வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்துதர்மபுரி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகள் ஊடுறுவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், வீரப்பன் முன்பு நடமாடிய காட்டுப் பகுதிகளான அஞ்செட்டி, தளி,பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படையினர் 3 பிரிவுகளாகப் பிரிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் போலீஸாரும் தீவிரக் கண்காணிப்பில் இரவு பகலாகஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் கரூர் ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு இன்று ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை எழுதியிருந்தவர், தான்ஒரு கூலித் தொழிலாளி என்றும் தினசரி கரூர் ரயில் நிலையம் வழியாக பயணிப்பவர் என்றும், சுதந்திர தினத்தன்று கரூர் ரயில்நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் எனவும் எழுதியிருந்தார்.
இதையடுத்து கரூர் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ளபகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications