சினிமா சான்ஸ்: கேரள பெண்களிடம் செக்ஸ் மோசடி செய்த ஐடியல்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

ஐடியல் சுப்ரமணியத்திற்கு கேரளாவில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர பங்களா இருப்பதை போலீஸார்கண்டுபிடித்துள்ளனர்.

Ideal Subramaniamவங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பல பேரை மோசடி செய்து பல கோடி ரூபாயை சுருட்டியதாக ஐடியல் சுப்ரமணியம் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை தங்களது காவலில் எடுத்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், ஐடியலை அவரதுசொந்த ஊரான விராலிப்பட்டிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டது. சொத்துக்கள் குறித்தும், பணம், நகை உள்ளிட்டவைகுறித்தும் விசாரணை நடத்திய போலீஸார் தற்போது கொடைக்கானலுக்கு ஐடியல் சுப்ரமணியத்தை அழைத்துச் சென்றுவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐடியல் சுப்ரமணியத்தின் மனைவி லீலாவதி, மகள் ஆகியோரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.ஐடியலுக்குச் சொந்தமான வீடுகள், நிலங்கள், நகை, பணம் குறித்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கேரளாவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் ஆடம்பர பங்களாவை ஐடியல் சுப்ரமணியம் கட்டியுள்ளது தெரிய வந்தது.அதுதொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தவிர கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தது குறித்தும் ஐடியல்தெரிவித்துள்ளார். மேலும், படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக பல கேரள இளம் பெண்களிடம் செக்ஸ் மோசடி செய்ததையும்அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 4 நாட்களாக வத்தலகுண்டு, கொடைக்கானலில் வைத்து நான்கு நாள் விசாரணை செய்த போலீஸார் அவரை மீண்டும்சென்னைக்குக் கொண்டு வந்ததுள்ளனர்.

விராலிப்பட்டியிலும் அதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கும் ஐடியலைக் கூட்டிச் சென்று அவரது மனைவி, மகளிடம்விசாரணை நடத்திய போலீசார் அவரது சொத்துக்கள், நகைகள், பணம் உள்ளிட்டவை குறித்து விவரங்களை சேகரித்துள்ளனர்.

விசாரணையின் இறுதியில் ஐடியல் சுப்ரமணியத்தின் 20க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.அவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் இயங்கி வந்த 36 கார்கள் தற்போது எங்கே இருக்கின்றன என்பது தெரியவில்லை. அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த நான்கு நாள் விசாரணையின்போது ஐடியலின் பல்வேறு மோசடிகள் தொடர்பாக பல புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகபோலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விசாரணைக்குப் பின்னர் ஐடியல் சுப்ரமணியனை போலீஸார் இன்று காலை சென்னைக்குக் கொண்டு வந்தனர். இங்குவைத்து 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது. அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+