கதிர்காமர் கொலை: பெண் உள்பட 12 தமிழர்கள் கைது- நாளை உடல் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதில்இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

Kadirgamarஇந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.

கதிர்காமர் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 12 தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் (வயது 73) வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலநபர்களால் அவரது வீட்டுக்கு அருகே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பெரும்பதற்றம் ஏற்பட்டது.

கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து இரவோடு இரவாக இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது குறித்துஅறிந்ததும் ராணுவத்தினரும், போலீஸாரும் கதிர்காமரின் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஹெலிகாப்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இதுவரை ஒரு பெண் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை அமைச்ரவையின் செய்தித்தொடர்பாளர் தயா ரத்னாயகே தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர், விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். ஆனால், கைதான அனைவருமேதமிழர்கள் ஆவர்.

இதற்கிடையே இந்தக் கொலைக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. ஆனால் தங்களுக்கும்கதிர்காமரின் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

கதிர்காமரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குநாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

கொழும்பிலுள்ள சுதந்திர தின சதுக்கத்தில் உடல் அடக்கம் நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் நாளை இலங்கையில்தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.

பிரதமர், ஜெ, கருணாநிதி இரங்கல்:இதற்கிடையே கதிர்காமர் கொலைக்கு பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும்பிரதமர் மன்மோகன் சிங்ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமர் கொல்லப்பட்டது குறித்து அறிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனதுஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

கதிர்காமர் இந்தியாவுக்கு ஒரு நண்பரைப் போல இருந்தார். அவரது இழப்பு இலங்கைக்கு ஈடு செய்ய முடியாததாகும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.இதே போல பாஜக தலைவர் அத்வானி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா உட்பட பலரும் கதிர்காமர் மறைவுக்கு இரங்கல்தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள கண்டன அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமர்சிலரால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

இலங்கையின் மேலும் ஒரு திறமைசாலியான அமைச்சர் பயங்கரவாதியின் கோழைத்தனமான குண்டுகளுக்கு பலியாகி விட்டார். இலங்கையில்அமைதியைக் கொண்டுவர அதிபர் சந்திரிகாவின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.

இந்த கோழைத்தனமான செயலை ஒட்டு மொத்த சர்வதேச சமுதாயமும் கண்டிக்க வேண்டும். கதிர்காமரின் இந்த மரணம் இலங்கையின் ஜனநாயகதலைமைக்கும், நடைபெற்று வரும் சமாதான நடவடிக்கைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இலங்கையின் இந்த புகழ் வாய்ந்த மகனின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இலங்கை அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்ஜெயலலிதா.

கதிர்காமர் கொல்லப்பட்டது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், கதிர்காமர் கொல்லப்பட்ட சம்பவம்அதிர்ச்சியளிக்கக் கூடியது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற சம்பவங்கள் இலங்கையில் அரும்பிக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடைக்கற்களாக அமைந்து விடக்கூடாது என்றுகுறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+