புலிகள் அலுவலகம் மீது குண்டுவீச்சு
கொழும்பு:
இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்தில் இன்று நண்பகலில் சரமாரியாக குண்டுகள்வீசப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமர் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கதிர்காமரின் கொலைக்கு புலிகள் தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுகின்ற போதிலும் அதை புலிகள்மறுத்துள்ளனர்.
இந் நிலையில் இலங்கையில் மட்டக்களப்பு பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகத்தின் மீது இன்றுகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் பைக்கில் வந்த சிலர் அலுவலகத்தின் மீது சரமாரியாக குண்டுகளை வீசினர்.
அப்போது அந்த அலுவலகத்தினுள் புலிகளின் அரசியல் பிரிவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் இந்ததாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த தாக்குதலில் அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டது.மேலும் அங்கிருந்தபொருட்கள் மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தன.
தங்கள் அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் தான் காரணம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே கதிர்காமரின் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என புலிகள் கூறியுள்ளதை ஏற்க இலங்கை அரசுமறுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications