இட ஒதுக்கீடு விவகாரம்: வெடிக்கிறது மாணவர்கள் போராட்டம்
சென்னை:
சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ளதீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது,கல்விக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்குஅனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந் நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நாளை வகுப்புபுறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த அகில இந்திய மாணவர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த மன்றத்தின் மாநிலத் தலைவர் திருமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விரோதமானதாகும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகள், கல்லூரிகள், குறிப்பாக சட்டக் கல்லூரிகளில் வகுப்புப்புறக்கணிப்பில் மாணவர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார்.
மேலும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பிலும் நாளை போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் முன்புஇச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications