கலைஞருடன் கவிஞர் கமல் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், தான் எழுதிய கவிதைகளை அவரிடம் படித்துக் காட்டி பாராட்டுபெற்றார்.
பன்முகம் கொண்ட ஒரு சில திரைக் கலைஞர்களில் கமல் முக்கியமானவர். வெறும் நடிப்புடன் நிற்காமல் பல விஷயங்களிலும்நிபுணத்துவம் பெற்ற கமல்ஹாசன் ஒரு கவிஞராகவும் அவதாரம் எடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிட முடிவு செய்துள்ள கமல், திடீரென திமுக தலைவர்கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார்.
கருணாநிதியிடம் தான் எழுதியுள்ள கவிதைகள் குறித்துத் தெரிவித்த கமல், பின்னர் அதிலிருந்து ஒரு சில கவிதைகளை படித்துக்காண்பித்தார். கமலின் கவிதைகளைப் பாராட்டிய கருணாநிதி தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்.
கருணாநிதியை சந்தித்த பின் வெளியே வந்த கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எழுதிய கவிதைகளை கலைஞரிடம்படித்துக் காண்பித்தேன். கவிதைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம், அவ்வப்போது எழுதுவேன். அப்படி எழுதிய கவிதைகள்நிறைய சேர்ந்து விட்டது. அதை ஒரு தொகுப்பாக வெளியிடப் போகிறேன்.
இக் கவிதைகளை கலைஞரிடம் படித்துக் காட்ட ஆசைப்பட்டேன். உடனே வருமாறு அழைப்பு விடுத்தார் கலைஞர். வந்துவாசித்துக் காண்பித்தேன், கேட்டுப் பாராட்டினார் என்றார்.
கமலின் கவிதைத் தொகுப்பை விரைவில் கருணாநிதியே வெளியிடுவார் என்பு தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications