விஜயகாந்த் எங்களுக்கு வேணாம்: ராஜ கண்ணப்பன் பிடிவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜயகாந்த் கட்சியின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை, அவரது கட்சியுடன் மக்கள் தமிழ் தேசம் கூட்டணி வைக்காதுஎன்று அக்கட்சியின் தலைவர் ராஜ கண்ணப்பன் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். (இவர் எதுக்கு இவ்வளவுஅவசரப்படுகிறார்?)

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதயமான ஜாதிக் கட்சிகளில் ஒன்று தான் மக்கள் தமிழ் தேசம். கோனார் சமுதாயவாக்குகளை அப்படியே கொத்திவிடலாம் என்று கருதி திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தில் குதித்தது மக்கள் தமிழ்தேசம்.

ஆனால், கண்ணப்பன் உள்பட ஜாதிய கட்சிகள் அனைத்துக்குமே தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுத்தார்கள். ஜாதிவிளையாட்டு விளையாடிப் பார்த்த திமுகவும் மண்ணைக் கவ்வியது.

இப்போது மீண்டும் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி மற்ற கட்சித் தலைவர்களை விட ரொம்பவும் சுறுசுறுப்பாகபேட்டிகள் தரத் தொடங்கியுள்ளார் ராஜ கண்ணப்பன். முன்பு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட ராஜ கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்னும்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில், சமீப காலமாக விஜயகாந்த் தொடங்கப் போகும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் ராஜ கண்ணப்பன்.விஜயகாந்த் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடையாது, எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி அவரால் வாக்குகளைப் பெற முடியாது.சொந்த செல்வாக்கை வைத்துத்தான் அரசியலில் அவர் காலம் தள்ள வேண்டும் என்று விமர்சித்த கண்ணப்பன், விஜயகாந்த்கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் மீண்டும் பேசுகையில், முதலில் விஜயகாந்த் கட்சி தொடங்கட்டும். ஆனால் அது மக்கள்ஆதரவு பெற்ற இயக்கமாக மாறுமா என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் பார்க்க வேண்டும்.

எங்களைப் பொருத்தவரை விஜயகாந்த் ஆரம்பிக்கப் போகும் கட்சியுடன் சேர மாட்டோம். திமுக கூட்டணியில்தான் நாங்கள்தற்போதும் இருக்கிறோம். எங்களது பொது எதிரி ஜெயலலிதா. திமுகவுக்கும் ஜெயலலிதாதான் எதிரி. எனவே பொதுஎதிரியை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துள்ள திமுகவுடன் நாங்கள் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது எங்களது கட்சித் தொண்டர்களின் விருப்பம் கூட என்றார் ராஜகண்ணப்பன்.

கட்சி ஆரம்பிக்கப் போகும் விஜயகாந்த்தே இதுவரை யாருடனும் கூட்டணி என்று சொல்லவில்லை. யாருடைய ஆதரவையும்கோரவில்லை.

இந் நிலையில் ராஜ கண்ணப்பன், சில பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தாங்களாகவே, நாங்கள்விஜயகாந்த்துக்கு ஆதரவு தர மாட்டோம் என்று வலியச் சென்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களது ஏச்சு பேச்சுகளால் விஜய்காந்துக்கு ஓசியில் பப்ளிசிட்டி கிடைப்பது என்னவோ நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+