13 லட்சம் போலி வாக்காளர் விண்ணப்பங்கள் தள்ளுபடி
சென்னை:
வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி சமர்பிக்கப்பட்ட 12.94 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக லட்சணக்கானவர்களை அதிமுகவினர் சேர்க்க முயன்றனர்.போலியான பெயர்கள், முகவரிகள் கொண்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அமைச்சர்களும்அதிமுகவினரும் கத்தை கத்தையாக தேர்தல் கமிஷனிடம் தந்தனர்.மேலும் 15 வயது கூட ஆகாத பலரது பெயர்களையும் பட்டியலில் சேர்த்திருந்தனர்.
இது குறித்து சரமாரியாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த விண்ணப்பங்களை தீவிரமாக சரி பார்க்க மத்தியதேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து வீடு வீடாக சரி பார்க்கும் பணி நடந்தது. இதில்லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் குப்தா பேசுகையில்,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 19.40 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் 6.45 லட்சம் பேருடைய விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
12.94 லட்சம் பேருடைய விண்ணப்பங்களில் முறையான கையெழுத்து இல்லை, முகவரிகளும் சரியாக இல்லை.மேலும், 15 வயதுக்குட்பட்ட பலருடைய பெயர்களும் இதில் இடம் பெற்றிருந்தன. இதுபோன்ற காரணங்களால்இவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
வாக்காளர் அடையாள அட்டையை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.வீடு மாறினாலும் கூட அந்த முகவரியை மட்டும் அடையாள அட்டையில் மாற்றிக் கொள்ளலாம்.
சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட 39 சட்டசபைத் தொகுதிகளின் இறுதிவாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 15ம் தேதி வெளியிடப்படும். மற்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்பட்டியல் இம்மாதம் 31ம் தேதி வெளியிடப்படுகிறது.
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலமாக கைது செய்யப்படாமல் உள்ளவர்களின் பெயர்களைவாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற கைது வாரண்ட் நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களை அக்டோபர் 5ம் தேதிக்குள் வாக்காளர்பட்டியலிலிருந்து நீக்கி விடுவோம் என்றார் குப்தா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications