கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சுமார் 40நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
கருணாநிதியின் கோபாலபுரத்திலுள்ள வீட்டுக்கு வைகோ இன்று காலை வந்தார். 9.30 மணி முதல் 10.10 மணி வரை இருவரும்பேச்சுவார்த்தை நடத்தினர்.வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எழுதிய புத்தகத்தின் வெளியீட்டுவிழா அடுத்த மாதம் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பையும், கருணாநிதி தமிழ்ப் பதிப்பையும் வெளியிடுகின்றனர். இவ்விழாவுக்கான அழைப்பிதழை இந்த சந்திப்பின் போது கருணாநிதியிடம் வைகோ கொடுத்தார்.












Click it and Unblock the Notifications