ஆசின் படத்தை வைத்து கனடா வாலிபரை ஏமாற்றிய கோவை பெண்!
கோவை:
நடிகை அசினின் புகைப்படத்தை தனது புகைப்படம் என்று கூறி கனடாவைச் சேர்ந்த வாலிபரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ளபொருட்களைப் பறித்து மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த ஊனமுற்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் வசித்து வருபவர் செளந்தர். இவருக்கு இன்டர்நெட்டில் சாட்டிங் மூலம் கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்அறிமுகமானார். சாட்டிங் மூலம் உரையாடி வந்த இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.இந்த நட்பைப் பயன்படுத்தி செளந்தரிடமிருந்து பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொண்டார் பூங்கொடி. இந்நிலையில் பூங்கொடியின் புகைப்படத்தை அனுப்புமாறு செளந்தர் கோரவே, தனது புகைப்படத்திற்குப் பதில் நடிகை அசினின்புகைப்படத்தை செளந்தருக்கு அனுப்பியுள்ளார் பூங்கொடி.
சினிமா விஷயங்களில் சுத்தமாக ஆர்வமில்லாத செளர்ந்தருக்கு அது நடிகை ஆசினின் புகைப்படம் என்று தெரியாமல்போய்விட்டதாம்.
பூங்கொடி அனுப்பி ஆசினின் படத்தைப் பார்த்து மயங்கிய செளந்தர், உடனடியாக அவரைக் காண விரும்பியுள்ளார். ஆனால்,பூங்கொடி ஜகா வாங்கிவிட்டார். தனது முகவரியைத் தரவில்லை.
ஆனாலும் கனடாவிலிருந்து கோவைக்குப் பறந்து வந்தார் செளந்தர். பூங்கொடியின் இ-மெயில் முகவரி மட்டுமே அவரிடம்இருந்ததால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாமல், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து மெயில்கள் அனுப்பினார்.ஆனால் பூங்கொடி சந்திப்பைத் தவிர்த்து வந்தார்.
இந் நிலையில் செளந்தரின் கனடா நண்பர்கள் அவரைத் தொடர்பு கொண்டு பூங்கொடியின் புகைப்படம் நடிகை அசினுடையபுகைப்படம் என்பதைத் தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்தார் செளந்தர். இதுகுறித்து கோவை போலீஸில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பூங்கொடியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். ஊனமுற்ற பெண்ணானபூங்கொடி ஏற்கனவே ஒருவரை வேறு வகையில் ஏமாற்றித் திருமணம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் இருந்து செளந்தர் அனுப்பி வைத்த பல விலை உயர்ந்த பொருட்களை பூங்கொடியிடமிருந்து போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications