மகனை கொலை செய்தாரா?: ஆண்டித் தேவர் வீட்டில் சிபிஐ ரெய்ட்
மதுரை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் ஆண்டித் தேவரின் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
மாஜி எம்எல்ஏவான ஆண்டித் தேவருக்கு இரண்டு மனைவிகள். இதில் சொத்துப் பிரச்சனை காரணமாக முதல் மனைவியின்நெருக்குதலால் இரண்டாவது மனைவி இந்திராணியின் மகன் சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்துவிட்டதாக புகார்கூறப்படுகிறது.பி.இ. பட்டதாரியான சிவராமன் 1998ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் திடீரென மாயமானார். இது தொடர்பாக மதுரை திடீர் நகர்காவல் நிலையத்தில் புகார் செய்தார் இந்திராணி. ஆனால், வழக்கைப் பதிவு செய்துவிட்டு போலீஸ் தூங்கப் போய்விட்டது. இதில்எந்த விசாரணையும் நடக்கவில்லை.
இதையடுத்து இந்திராணியின் தம்பியும் சிவராமனின் தாய்மாமாவுமான ராஜேந்திர நரசிம்மன் மீண்டும் போலீசிடம் ஒரு புகார்தந்தார். அதில் சிவராமன் காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை ஆண்டித் தேவர் மீதே சந்தேகம் ஏற்படுவதாகக்கூறியிருந்தார்.
ஆனால் போலீஸ் தரப்பில் இதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தைஅணுகினார் தொடர்ந்தார் ராஜேந்திர நரசிம்மன்.
முதல் மனைவியின் பேச்சைக் கேட்டு சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும்,இது குறித்து போலீசார் சரியாக விசாரிக்காததால், இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுமாறும் கோரியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிவராமனை தனது முதல் மனைவியின் உறவினர்களோடு சேர்ந்து ஆண்டித் தேவரே கொன்றிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் மதுரையில் உள்ள ஆண்டித்தேவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்திவருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications